வீட்டிலே வெட்டியாக இருந்த கணவர், வேலைக்கு அனுப்ப திட்டமிட்டு மனைவி செய்த காரியம் - இறுதியில் நேர்ந்த கொடுமை!
வீட்டில் சும்மாவே இருந்த கணவரை வேலைக்கு அனுப்புவதற்கு மனைவி செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்கு செல்லாத கணவர்
பெங்களூரில் உள்ள மல்லேசுவரம் என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சமயத்தில், அந்த பெண் மல்லேசுவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் ஒன்று அளித்தார். அதில், தான் ஸ்கூட்டரில் வெளியே சென்றபோது, சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றபொழுது மர்மநபர்கள் ஸ்கூட்டரை திருடி சென்றுவிட்டனர். அந்த ஸ்கூட்டரில் தங்க நகைகள் உள்ளன என்று கூறினார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது விசாரணையில் இந்த பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளது, பின்னர் விசாரணையில் உண்மை தெரியவந்தது. அதாவது அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வருமானம் இன்றி அவர்கள் தவித்துள்ளனர், இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் அவரை வேலைக்கு அனுப்ப திட்டமிட்ட அந்த பெண் தனது நகைகள் திருட்டு போனதாக கூறினால் கணவர் வேலைக்கு செல்வார் என அவர் எண்ணினார். இதையடுத்து தனது திட்டப்படி, வங்கி லாக்கரில் இருந்த தனது நகைகளை நண்பர் தனஞ்ஜெய் மற்றும் ராகேஷ் ஆகியோர் உதவியுடன் திருடிவிட்டு போலீசில் பொய்யான புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சொந்த நகையை திருடிய பெண் மற்றும் அவருக்கு 2 உதவிய போரையும் போலீசார் கைது செய்தனர்.