லிட்டர் கணக்கில் மது அருந்தும் மக்கள் - ஏன், எங்கெல்லாம் தெரியுமா?
அதிக அளவில் மது அருந்தும் மக்களை கொண்ட நாடுகள் குறித்து பார்ப்போம்.
மது பழக்கம்
சந்தோஷமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் மது எடுத்துக்கொள்வது ஒரு பழக்கமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அதிகமாக மதுவை அருந்தும் நாடுகள் எதெல்லாம் தெரிந்துக் கொள்வோம்.
ருமானியா அதிக மது அருந்தும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் சராசரியாக 27.3 லிட்டர் மது அருந்துகின்றனர். ஜார்ஜியா குடிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14.3 லிட்டர் மது அருந்துகின்றனர்.
சராசரி அளவு
செக் குடியரசு மக்கள் ஆண்டுக்கு சுமார் 13.29 லிட்டர் மது அருந்துகின்றனர். லாட்வியாவில் 1 ஆண்டுக்கு 9.8 லிட்டர் மது அருந்தியுள்ளனர். 2021ல் அங்கு தனிநபர் மது அருந்தும் அளவு 13.09 ஆக உயர்ந்துள்ளது.
ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் 12.2 லிட்டர், உகாண்டாவில் 12.21 லிட்டர், சீசேல்ஸ் மக்கள் 11.9 லிட்டர், ஆஸ்திரியாவில் 11.97 லிட்டர் மது அருந்துகின்றனர்.