பெண்களிடையே அதிகரித்த மது பழக்கம் : காரணம் இதுவா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
பெண்களிடம் கொரோனாவுக்கு பிறகு மது அருந்தும் பழக்கம் அதிகமாகியுள்ளதாக அதிர்ச்சி தரும் ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதிகரித்த மது பழக்கம்
ஒரு காலத்தில் மது அருந்துவது என்பது,இழிவான செயலாக பார்க்கப்பட்டது , ஆனால் தற்போது முக்கியமான பேஷனாக மாறிவிட்டது. அதுவும் கொரோனாவுக்கு பிறகு டெல்லியில் உள்ள பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று சுமார் 5000 பெண்களிடையே ஆய்வு நடத்தியது. அதில் கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லியில் தான் அதிகமாகியுள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது,
மதுவுக்கு அடிமையான பெண்கள்
இதற்கு காரணம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணமாக கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் மது பானத்துக்கு அளிக்கப்பட்ட சலுகையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற செய்தியும் மதுவினை வீட்டுக்கே டெலிவரி செய்யும் அறிவிப்பும் மது வாங்க தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களிடமும்மது அருந்தும் பழக்கம் டெல்லியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதில் விஸ்கி விற்பனை 59.5 சதவீதம், பீர் விற்பனை 5.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.