பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை - பொதுமக்களை எச்சரித்த தமிழக அரசு!
பஞ்சுமிட்டாயை விற்க தமிழ்நாடு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விற்பனைக்கு தடை
சுற்றுலா தளங்களில் அதிகளவில் விற்கப்படும் உணவுகளில் பஞ்சுமிட்டாயும் ஒன்று. பெரும்பாலான மக்கள் இதை விரும்பி வாங்கி உண்ணுவதும் உண்டு. அண்மையில் உணவு பாதுக்காப்புதுறையினர் புதுச்சேரி மற்றும் சென்னையில் நடத்திய சோதனையில் பஞ்சுமிட்டாயை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் முடிவில் பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயணம் கலக்கப்படுவதாக தகவல் வெளியானது. இவற்றில் கலக்கப்படும் ‘ரோடமைன் பி’ என்னும் ரசாயனமானது புற்று நோய் உருவாக்கும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
தொடர்ந்து, சென்னையில் மாவட்ட அதிகாரியான சதீஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறையினர் பஞ்சு மிட்டாய் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவணங்களில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லா, ரசாயன கலவை செய்த பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்கள் யாரும் கலர் கலராக விற்கபடும் பஞ்சுமிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர். இம்மதிரியான புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்களை உபயோக்கிக்கும் நிறுவணங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க சுகாதரத்துறையிடம் உணவு பாதுக்கப்புதுறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.