அமெரிக்காவில் 300 ஏக்கரில் பண்ணை வயல் - விவசாயத்தில் அசத்தும் பஞ்சு முட்டாய் நடிகர்!

Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Dec 21, 2023 03:15 PM GMT
Report

அமெரிக்காவில் உள்ள தனது பண்ணை வயலில்தான் நடிகர் நெப்போலியன் தனது ஓய்வு நேரங்களை செலவிடுகிறார். 

நடிகர் நெப்போலியன் 

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் நெப்போலியன். பல தமிழ் படங்களில் நடித்த இவர், மலையாம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில ஹாலிவுட் படங்களிலும் நெப்போலியன் நடித்துள்ளார். இவர் நடித்த 'எட்டுப்பட்டி ராசா' படத்தில் இடம்பெற்ற 'பஞ்சு மிட்டாய் சேலை கட்டி' என்ற பாடல் இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் 300 ஏக்கரில் பண்ணை வயல் - விவசாயத்தில் அசத்தும் பஞ்சு முட்டாய் நடிகர்! | Actor Napoleon 300 Acres Farm Field In America

தற்போது நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் இவர் தனது 60வது பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு, 300 ஏக்கர் கொண்ட தனது பண்ணை வயலை சுற்றிக்காட்டியுள்ளார். அந்த பண்ணையில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உள்ளது.

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?

சென்னையில் ஒரு பெரிய அரண்மனை; வசித்து வரும் மன்னர் குடும்பம் - எங்கு தெரியுமா?

பண்ணை வயல் 

1 ஏக்கர் அளவில் குளம் ஒன்றும் செயற்கை முறையில் நெப்போலியன் அமைத்து வருகிறார். ஒய்வு எடுப்பதற்காக 3 பெட்ரூம் கொண்ட வீட்டையும் பண்ணை வயலுக்குள் காட்டியுள்ளார். அதில் நீச்சல் குளமும் உள்ளது.

அமெரிக்காவில் 300 ஏக்கரில் பண்ணை வயல் - விவசாயத்தில் அசத்தும் பஞ்சு முட்டாய் நடிகர்! | Actor Napoleon 300 Acres Farm Field In America

விருந்தினர்கள் வந்தால் ஓட்டல் ரேஞ்சுக்கு உணவு சமைத்துக்கொள்ள சகல வசதிகளும் உள்ளது. காய்கறி செடிகளுடன் அறிய வகை மூலிகைகளையும் இந்த தோட்டத்தில் பயிரிடப்படுகிறது. இந்த பண்ணை வயலில்தான் நடிகர் நெப்போலியன் தனது ஓய்வு நேரங்களை செலவிடுகிறார். இந்த வீடியோ இப்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் - டோக்கன்கள் வழங்கும் தேதி அறிவிப்பு!