கொரோனா எதிரொலி:தமிழகத்தில் கட்டுபாடுகளுக்கு வாய்ப்பு - அமைச்சர் மா.சு

COVID-19 COVID-19 Vaccine Tamil nadu Ma. Subramanian
By Sumathi Jun 17, 2022 09:44 AM GMT
Report

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா எதிரொலி:தமிழகத்தில் கட்டுபாடுகளுக்கு வாய்ப்பு - அமைச்சர் மா.சு | Corona Increases Restrictions Will Be Implemented

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட துணை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பரணிதரன்,

கொரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

கொரோனா எதிரொலி:தமிழகத்தில் கட்டுபாடுகளுக்கு வாய்ப்பு - அமைச்சர் மா.சு | Corona Increases Restrictions Will Be Implemented

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 221 பேருக்கும்,

 400 படுக்கைகள் தயார்

செங்கல்பட்டில் 95 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில்,

அதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

 2, 3 சதவீதம்

தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை.

தற்போது தமிழகத்தில் 2, 3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.    

தந்தையின் விநோத பூஜை - உயிரைவிட்ட 4வயது குழந்தை! தொடரும் அதிர்ச்சி சம்பவம்?