தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 100ஐ தாண்டி பதிவாகியுள்ளது. இதுகுறித்து மருத்துவ துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 14049 பேருக்கு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த கொரோனா பாதிப்பு 34,55,613 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து 52 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று மட்டும் சென்னையில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 100-யைக் கடந்துள்ளது.