கோரத்தாண்டவமாடும் கொரோனா; முகக்கவசம் கட்டாயம்? மத்திய அரசு
முகக்கவசம் கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல்
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளில் தொற்று பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால், ஆயிரத்து 9 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் தொற்றுப் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய அரசு அறிவுரை
மகாராஷ்டிராவில் 209 பேர், டெல்லியில் 104 பேர், தமிழ்நாட்டில் 69 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை ந்டவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் நோய் பரவல் அபாயம் இருந்தால் ரத்து செய்ய வேண்டும் என பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
Singappenne: ஆனந்தி இருக்கும் இடத்திற்கு வந்த ரகு... அன்புவிடம் காதலை வெளிப்படுத்தும் தருணம் Manithan