கருப்பு அட்டை ஒட்டி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு - மக்களே உஷாரா இருங்க..
ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஏடிஎம் திருட்டு
திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில், கஸ்டமர்கள் பணம் எடுக்க சென்றால், பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்தில் புகாரளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், வங்கி மேலாளர் நரேன்குமார், ஏடிஎம் மிஷினை சோதனை செய்தபோது பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து வெளியே பணம் வராமல் தடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள்,
நூதன சம்பவம்
கள்ளச்சாவி மூலம் ஏடிஎம் மிஷினை திறந்து, பணம் வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மிஷினில் பணம் எடுக்கும்போது, பணம் வராமல் திரும்பி சென்றதுமே, சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் வந்து, அந்த கருப்பு அட்டையில் சிக்கிய கஸ்டமர்களின் பணத்தை எடுத்து செல்வதும் தெரியவந்தது.
பின் போலீஸாருக்கு புகாரளித்ததையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த குல்தீப் சிங் (26), பிரிட்ஜ் பான் (30), சுமித் யாதவ் (33) ஆகிய 3 பேர் இந்த கொள்ளையை அரங்கேற்றியது கண்டறியப்பட்டது.
பின் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது அம்பலமானது.