கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு - மீண்டும் கட்டுப்பாடுகள்?
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளில் தொற்று பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால், ஆயிரத்து 9 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் தொற்றுப் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்களே கவனம்..
மகாராஷ்டிராவில் 209 பேர், டெல்லியில் 104 பேர், தமிழ்நாட்டில் 69 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
மேலும், தேவைப்படும் பட்சத்தில், தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.