தமிழகத்தில் ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா தொற்று..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்த கொரோனா தொற்று
நேற்று தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,64,131 ஆக உள்ளது.
தலைநகர் சென்னையில் மட்டும் 497 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 026 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,678-ல் இருந்து 5,174- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இன்று 567 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,20,931 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துவருவதால் தமிழக அரசு ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மக்களும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும் என அரசு வலியுறுத்திள்ளது.