தமிழகத்தில் 100 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 139 உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ளது,இந்த நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 629 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 613 ஆக உள்ளது.
TNCorona District Wise Data 01 Jun 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 1, 2022
Ariyalur 0
Chengalpattu 58
Chennai 59
Coimbatore 6
Cuddalore 0
Dharmapuri 0
Dindigul 0
Erode 0
Kallakurichi 0
Kancheepuram 4
Kanyakumari 0
Karur 0
Krishnagiri 3
Madurai 1
Mayiladuthurai 0
Nagapattinam 0
Namakkal 0
Nilgiris 0
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் யாரும் அதிக அளவில் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.