கொரோனா உயிரிழப்பு இனிமே வராதுன்னு சொல்ல முடியாது : எச்சரிக்கும் அமைச்சர்
கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் இனிமேல் வரவே வராது என கூற முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கல்பட்டில் நேற்று மட்டும் அதிகப்படியாக 95 பேருக்கு தொற்று இருந்ததாகவும் தற்போது 100-ஐ கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார் .
மேலும் , பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியுமாறு கேட்டு கொண்ட அவர், அரசு நெஞ்சக மருத்துவமனையில் 100 படுக்கைகளும்,சித்தா மருத்துவமனையில் 200 படுக்கைகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 படுக்கைகளும் தற்போது தயாரக உள்ளது என தெரிவித்தார்.
கொரோனா உயிரிழப்பு வராது என கூற முடியாது
கொரோனாவால் உயிரிழப்பு இனிமேல் வரவே வராது என எடுத்து கொள்ளமுடியாது என்றும், கடந்த 2 மாதங்களில் உயிரிழப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று தஞ்சை சேர்ந்த 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவருக்கு நீண்ட நாள் காய்சல் இருந்துள்ளது. ஆனால் அவர் காலதாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .
கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் தமிழகம் வெல்லும் - அமைச்சர் நாசர் உறுதி