கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் தமிழகம் வெல்லும் - அமைச்சர் நாசர் உறுதி

Corona Lockdown Tamil Nadu
By mohanelango May 19, 2021 06:48 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் தமிழக அரசு அதை வென்று காட்டும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் உறுதியளித்துள்ளார்.

சென்னை ஆவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு தோறும் காய்ச்சல் கணகெடுப்பு குறித்த துவக்க விழா நடைபெற்றது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் தமிழகம் வெல்லும் - அமைச்சர் நாசர் உறுதி | Minister Nasar Tamilnadu Corona Third Wave

பின்னர் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஆவடி அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் கருவியை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ”திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருவதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் தமிழக அரசு வெல்லும்”  என உறுதியாக தெரிவித்தார்.