டோல்கேட்டில் நிகழ்ந்த கொடூரம்.. தடுத்து நிறுத்திய ஊழியரை ஏற்றி கொன்ற கண்டெய்னர் லாரி - அதிர்ச்சி!
தவறாக வந்த லாரியை தடுத்ததால் டோல்கேட் ஊழியருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோல்கேட்
சென்னை, மணலி பகுதியில் உள்ள தேசியநகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் மஞ்சம்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் வழக்கம்போல் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது மணலி புதுநகரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.
அந்த லாரி தவறான பாதையில் வந்ததால் ஜெயபிரகாஷ் அதனை தடுத்து நிறுத்த முயன்றார். இதனைக் கண்ட டிரைவர் லாரியை வேகமாக திருப்ப முயன்றார். அப்போது வாட்ச்மேன் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரிவினையை உண்டாக்கும், இந்தியாவை துண்டாக்கும் - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி!
போலீஸ் விசாரணை
இந்நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது, இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர், போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த லாரியை விரட்டி சென்றனர்.
அந்த லாரியை மடக்கி பிடித்து டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் இதற்கு முன் அவர் சாலையில் சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார். அந்த மக்கள் துரத்தியதால் இவர் தப்பி மாற்று பாதையில் செல்ல முயன்று டோல்கேட் பகுதிக்கு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுளளது.