கண்ணில் அல்சரா?.. சாதாரணமாக நினைத்து கிட்டத்தட்ட கண்ணை இழந்த பெண்!
பெண் ஒருவருக்கு கண்ணில் அல்சர் வந்ததால் ஏற்பட்ட வினை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண் எரிச்சல்
இங்கிலாந்து நாட்டில், ஸ்டெஃப் கராஸ்கோ என்ற 25 வயதான பெண் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு திடீரென கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை சாதாரணமாக நினைத்து அதனை விட்டார், ஆனால் நாட்கள் செல்ல செல்ல தன் அரிப்பு மற்றும் எரிச்சல் அதிகமாக இருந்துள்ளது.
இதனால் அவர் கண் மருத்துவரை அணுகினர், அப்பொழுது காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தியதால் அவர் கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
அவரது கண் மருத்துவரான ஜாக் ப்ரெண்டன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அவரை ஒரு சிறப்பு கண் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளார். அங்கு ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, புண்னை குணப்படுத்தும் முயற்சியாக தினமும் 72 முறை கண்ணில் சொட்டு மருந்து விடப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்
இந்நிலையில், அங்கு அந்த பெண்ணிற்கு சொட்டு மருந்து செலுத்தியும் சரியாகவில்லை, அதன்பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவரது பார்வை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி உள்ளது.
பின்னர் அந்த பெண் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார், அதில் "நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, கண் நோய் சிறப்பு மருத்துவர் ஜாக் மற்றும் மருத்துவக் குழு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்தது. அதோடு என்னை மனரீதியாகவும் தேற்றினார். அவரை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்" என்றார்.