புறா எச்சம்; மீனா கணவர் இறப்பு நியாபகமிருக்கா? தொடர்ந்து மற்றொரு பெண் பாதிப்பு!
பெண் ஒருவருக்கு வெற்றிகரமான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது.
நுரையீரல் பாதிப்பு
குஜராத்தைச் சேர்ந்தவர் திம்பால் ஷா(42) என்ற பெண். இவர் திடீரென நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பரிசோதிக்கப்பட்டதில், நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, இரட்டை நுரையீரல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த பெண்ணுக்கு பல மணி நேரம் நடைபெற்ற ஆப்ரேஷனை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
உறுப்புமாற்று சிகிச்சை
இந்த உறுப்புமாற்று சிகிச்சை உலகளவில் புகழ்பெற்ற ரேலா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிலையில், இவரது வீட்டின் அருகே புறாக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன் கழிவுகள் மற்றும் எச்சங்களில் காரணமாகவே இவருக்கு இந்த மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் ஆப்ரேஷன் செய்யப்பட்டதால் அவரது உயிர் இப்போது காப்பாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, புறாக்களின் எச்சம் காரணமாக நடிகை மீனாவின் கணவர் நுறையீரல் பாதித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.