பெண் போலீஸுக்கு லவ் டார்ச்சர்.. மறுத்ததால் கொன்றுவிட்டு 2 வருடம் குரலை மாற்றி ஏமாற்றிய கான்ஸ்டபிள்!
கான்ஸ்டபிள் ஒருவர் தனது காதலியை கொன்றுவிட்டு நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
டெல்லியில் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுரேந்திரா ராணா (42). இவருக்குத் திருமணாகி 12 வயதில் ஒரு மகன் உள்ளார். 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மோனா என்ற பெண், டெல்லி போலீஸில் கான்ஸ்டபிளாக வேலையில் சேர்ந்தார். அவர் சுரேந்திராவிற்குக்கீழ் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் இருவரும் பழகி வந்தனர், அப்பொழுது இவர் மோனாவை காதலித்துள்ளார், அதனை சொன்னபோது அவர் நிராகரித்துவிட்டார். அப்பொழுது மோனாவுக்கு உத்தரப்பிரதேசத்தில் சப் இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது.
இதனால் டெல்லி போலீஸ் வேலையை ராஜினாமா செய்து, பின் சப் இன்ஸ்பெக்டர் வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு, ஐபிஎஸ் ஆகவேண்டும் என்ற இஅவர்து கனவிற்காக டெல்லியில் தங்கியிருந்து யூ.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்தார்.
கொலை
இந்நிலையில், சுரேந்திரா மோனாவை பின்தொடர்ந்தார், அவர் பலமுறை கேட்டும் மோனா மறுத்துவிட்டார். 2021-ம் ஆண்டு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, அப்பொழுது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மோனாவை அழைத்து சென்று கழுத்தை நெரித்துக் கொலைசெய்து, உடலை அங்கிருந்த சாக்கடையில் போட்டுவிட்டார். அதோடு உடல்மீது ஏராளமான கற்களைப் போட்டு மறைத்துவிட்டார்.
ஆனால் அவரது பெற்றோரிடம் அவர் உயிரோடு இருப்பதாக, மொபைல் போனில் அவரின் பெற்றோரைத் தொடர்புகொண்டு குரலை மாற்றி, தான் அரவிந்த் என்பவருடன் சென்றுவிட்டதாகக் கூறி, நம்பவைத்தார். மோனாவின் பெற்றோர் டெல்லிக்கு இது குறித்துப் புகார் கொடுக்க வந்தபோது, அவர்களுடன் சேர்ந்து சுரேந்திராவும் புகார் கொடுக்கச் சென்றார். பல மாநிலங்களுக்கு சுரேந்திராவும் தேடுவது போல குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
இவர் தனது மைத்துனர் ராபின் என்பவரைப் பயன்படுத்தி மோனாவின் குடும்பத்துக்கு போன் செய்து தானும் மோனாவும் திருமணம் செய்து குர்காவில் வசிப்பதாகவும், இப்போது பஞ்சாப்புக்குச் சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். போலீசார் ராபின் பேச பயன்படுத்தும் நம்பரை கண்காணிக்க ஆரம்பித்தனர்.
இதில் அந்த நம்பர் ராஜ்பால் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, உண்மைகள் தெரியவந்தது. மேலும், இதில் ஈடுபட்ட ராஜ்பால், சுரேந்திரா, ராபின் ஆகியோர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.