அண்ணியை ஆசைக்கு இணங்க அழைத்த கொழுந்தன்.. ஸ்பீக்கர் ஓரம் தெரிந்த கை - 2 வயது குழந்தை கொடூர கொலை!
தனது அண்ணி ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொழுந்தன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவறாக நடந்த கொழுந்தன்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப்பந்தல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருமூர்த்தி என்பவருக்கு 24 வயது. இவரது மனைவி ஜெகதீஸ்வரி, இவர்களுக்கு திருமூர்த்தி (2) என்ற மகனும் புவனேஸ்வரி என்ற ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளனர். குருமூர்த்தி பெங்களூரில் தங்கி இருந்து சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ்(22) என்பவரும் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவர் அடிக்கடி தனது அண்ணி வீட்டிற்கு சென்று வந்தார், இவர் சொந்த அண்ணியிடம் பலமுறை தவறாக நடந்துள்ளார். இதனை வெளியே சொன்னால் பிரச்சனை ஆகும் என்று பொறுத்துக்கொண்டார் ஜெகதீஸ்வரி. தொடர்ந்து கொழுந்தன் இவ்வாறு செய்ததால் அவர் கண்டபடி திட்டிவிட்டு அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
கொலை
இந்நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ், ஜெகதீஸ்வரியை பழிவாங்குவதற்காக கடந்த 17-ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தையை யாருக்கும் தெரியாமல் அவனது வாயைப்பொத்தி கழுத்தை நெரித்துவிட்டு, தலையை சுவரில் அடித்தும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் குழந்தையின் உடலை வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பெட்டிக்குள் மறைத்து வைத்து விட்டு எதுவும் தெரியாததுபோல் ராஜேஷ் வெளியில் சென்றுவிட்டார்.
பின்னர் குழந்தையை காணவில்லை என்று குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர். குழந்தை காணாமல் போனது குறித்து விசாரிக்க கிராம மக்கள் வந்துள்ளார், அப்பொழுது ஒரு பெண்ணின் கை ஸ்பீக்கர் பாக்ஸில் பட்டதும் கீழே விழுந்தது. அதில் குழந்தையின் கை தெரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் அந்த பாக்ஸை திறந்து பார்த்தனர் அதில் குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிந்ததும் வந்து விசாரணை செய்ததில் ராஜேஷ் மீது சந்தேகம் எழுந்தது, அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அண்ணி மறுத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.