ஆசைக்கு இணங்க மறுத்த பெண் நிர்வாகி.. ஒழித்துகட்டிடுவேன், மிரட்டிய திமுக எம்எல்ஏ - பரபரப்பு புகார்!

DMK Viral Video Thiruvallur
By Vinothini Aug 31, 2023 05:19 AM GMT
Report

பெண் நிர்வாகி ஒருவர் எம்.எல்.ஏ-வின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறித்ததாக புகாரளித்துள்ளார்.

பெண் நிர்வாகி

திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளராகவும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் சந்திரன். இவர் மீது திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

dml-mla-chandran-threatens-women-executive

அந்த வீடியோவில், தான் திருவள்ளூர் மகளிர் தொண்டரணி அமைப்பாளராக 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளதாகவும், திமுக அறிவித்த பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது எம்.எல்.ஏ இவரை பதவியில் இருந்து நீக்கியதாக கூறியுள்ளார்.

திமுக எம்.எல்.ஏ

இதனை தொடர்ந்து, அவர் அந்த வீடியோவில், திமுக எம்.எல்.ஏ சந்திரன்ன், மகளிர் அணியைச் சேர்ந்த பெண்களிடம் போன் நம்பர் கொடுத்து தன்னிடம் பேச வைக்குமாறு வற்புறுத்தியதாகவும், அவர்களை தனது ஆசைக்கு இணங்க வைக்குமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால், இதுபோன்ற கேவலமான பிழைப்பு எனக்கு தேவையில்லை என்று தான் கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

dml-mla-chandran-threatens-women-executive

திமுகவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் மகளிர் அணியினருக்கு இது போன்று அச்சுறுத்தல் ஏற்படுத்தலாமா?. இது குறித்து புகாரளிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து புகார் அளிக்க சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற போது அவரை பார்க்க முடியாததால் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் புகார் அளித்ததாக கூறியுள்ளார்.

கட்சியை விட்டு துரத்திவிடுவேன், ஒழித்துவிடுவேன் என எம்.எல்.ஏ மிரட்டினார், ஆனால், தலைவரின் கவனத்திற்குச் செல்லும் வரை இந்த வீடியோவை பதிவிட்டுக்கொண்டே இருப்பேன். தலைவர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.