ட்விட்டரில் அவதுாறு பதிவு - பாஜக பெண் நிர்வாகி அதிரடி கைது..!
நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரை தரம் தாழ்ந்த முறையில் ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்ட கோவை பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் அவதுாறு பதிவு
கோவை சிங்காநல்லூர் சிவா கார்டனைச் சேர்ந்தவர் உமா கார்க்கி(26). பாஜக ஆதரவாளரான இவர் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். அத்துடன் தமிழக முதலமைச்சர் , அமைச்சர்கள் குறித்தும் அதிரடியாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தந்தை பெரியார், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ட்விட்டரில் உமா கார்க்கி கருத்துக்களைப் பதிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட திமுக ஐ.டி விங்க் ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸில் அளித்தார்.
பாஜக பெண் நிர்வாகி கைது
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீஸார், உமா கார்க்கியை இன்று கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர்கள் சந்திப்பு கூட்டத்தில் உமா கார்க்கிக்கு சிறந்த செயற்பாட்டாளர் என்ற விருதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கியது குறிப்பிடத்தக்கது.