பாஜக வெற்றி பெற்றால் நாட்டை 22 பணக்காரர்கள் இயக்குவார்கள் - எச்சரிக்கும் ராகுல் காந்தி!
பாஜக வெற்றி பெற்றால் நாட்டை 22 பணக்காரர்கள் இயக்குவார்கள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஒடிசா மாநிலம் போலங்கீரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பேரணி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அனுமதிக்கமாட்டோம்
அப்போது பேசிய அவர் "பாஜக இந்த புத்தகத்தை (கையில் வைத்திருந்த அரசியலமைப்பு புத்தகத்தை பார்த்து) கிழிக்க விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் இந்திய மக்களாகிய நாம் அதை அனுமதிக்கமாட்டோம்.
பாஜக வெற்றி பெற்றால் அவர்கள் இட ஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள். பொது நிறுவனங்கள் தனியார் மயமாகும். நாட்டை 22 பணக்காரர்கள் இயக்குவார்கள். இதனால் மக்களுடைய அரசாங்கம் ஆட்சியமைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.