2 மனைவிகள் இருந்தால் ரூ.2 லட்சம் நிதியுதவி - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு!

Indian National Congress Madhya Pradesh
By Sumathi May 10, 2024 07:53 AM GMT
Report

2 மனைவிகள் இருந்தால் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

காந்திலால் பூரியா

மத்திய பிரதேசம், ரத்லம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காந்திலால் பூரியா போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு, சைலனாவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார்.

காந்திலால் பூரியா

இதில், அம்மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் - பாஜக பெண் வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் - பாஜக பெண் வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

சர்ச்சை பேச்சு

அப்போது வேட்பாளர் காந்திலால் பூரியா பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும் என எங்கள் (காங்கிரஸ்) தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காந்திலால் பூரியா, பெண்களை அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தப் பேச்சு தொடர்பான வீடியோவை மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தேர்தல் ஆணையத்துக்கு டேக் செய்து, பூரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.