பிரதமரின் சர்ச்சை பேச்சு - எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

BJP Narendra Modi Rajasthan Lok Sabha Election 2024
By Swetha Apr 25, 2024 04:28 AM GMT
Report

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் சர்ச்சை பேச்சு 

நடப்பாண்டில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் களம் சற்று சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி தனது வாக்கு சேகரிப்பு பண்ணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

பிரதமரின் சர்ச்சை பேச்சு - எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்! | Muslims Bjp Minority Team Leader Removed From Bjp

முன்னதாக மோடி சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் இஸ்லாமியர்கள் குறித்து விமர்சித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் சார்பில் முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று கூறியிருந்தார். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இவ்வாறு பேசியது பெரும் விவாதமாக மாறி உள்ளது.

எனது 90 வினாடி உரையால் பீதி; காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது? பிரதமர் கேள்வி!

எனது 90 வினாடி உரையால் பீதி; காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது? பிரதமர் கேள்வி!

பாஜக தலைவர் நீக்கம்

இந்த உரைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் பேச்சு மத வெறுப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக புகாரும் அளித்துள்ளன.

பிரதமரின் சர்ச்சை பேச்சு - எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்! | Muslims Bjp Minority Team Leader Removed From Bjp

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதாவது, ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவரான உஸ்மான் கனி பிரதமர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதன் காரணமாக 3 முதல் 4இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும் வாக்குச் சேகரிக்கும் போது பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இதனால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உஸ்மான் கனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.