எனது 90 வினாடி உரையால் பீதி; காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது? பிரதமர் கேள்வி!

Narendra Modi Rajasthan Lok Sabha Election 2024
By Swetha Apr 23, 2024 11:19 AM GMT
Report

எனது 90 வினாடி பேச்சை கண்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி பீதியடைந்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளது.

 90 வினாடி உரை 

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் இன்று பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், "நேற்று முன்தினம் நான் ராஜஸ்தானுக்கு வந்தபோது, 90 வினாடிகள் நீடித்த எனது உரையில் சில உண்மைகளை நாட்டின் முன் முன்வைத்திருந்தேன்.

எனது 90 வினாடி உரையால் பீதி; காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது? பிரதமர் கேள்வி! | 90 Sec Speech Paniced Entire Congress And India

இது ஒட்டுமொத்த காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் சொத்தை அபகரித்து அதன் சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் ஆழமான சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டு மக்களின் முன் வைத்தேன். அவர்களின் வாக்கு வங்கி அரசியலை அம்பலப்படுத்தினேன்.

நாட்டின் செல்வத்தின் அதிகாரம் முஸ்லீம்களுக்குத்தான் - மோடி பேச்சுக்கு ராகுல் கடும் தாக்கு!

நாட்டின் செல்வத்தின் அதிகாரம் முஸ்லீம்களுக்குத்தான் - மோடி பேச்சுக்கு ராகுல் கடும் தாக்கு!

காங்கிரஸ் அஞ்சுகிறது

எப்படியிருந்தாலும், காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறது? கடந்த 2014ல் மோடியை டெல்லியில் பணியாற்ற அனுமதித்தீர்கள். அப்போது யாரும் கற்பனை கூட செய்யாத முடிவுகளை நாடு எடுத்தது.

எனது 90 வினாடி உரையால் பீதி; காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது? பிரதமர் கேள்வி! | 90 Sec Speech Paniced Entire Congress And India

ஆனால் 2014க்குப் பிறகும் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால், இன்று என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். காங்கிரஸ் இருந்திருந்தால் ஜம்மு-காஷ்மீரில் இன்றும் நமது படைகள் மீது கற்கள் வீசப்பட்டிருக்கும்.காங்கிரஸ் இருந்திருந்தால் எதிரிகள் எல்லையைத் தாண்டி வந்திருப்பார்கள்.

காங்கிரஸ் இருந்திருந்தால், நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டிருக்காது. நமது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்காது” என்று கூறியுள்ளார்.