பிரதமரின் கீழ்த்தரமான பேச்சு - முஸ்லிம்களுக்கு எதிராக!! வலுக்கும் கண்டனங்கள்
நாட்டின் மக்களவை தேர்தல் அடுத்தடுத்த கட்டங்களை எட்டியுள்ளது.
மக்களவை தேர்தல்
தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் நெருங்கியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் 14 தொகுதிகள் உட்பட 88 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் சூழலில், தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பீர்கள், அதை எல்லாம் குழந்தைகள் அதிகம் வைத்துள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதுதேவைதானா?
கண்டனம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் இதையே சொல்கிறது முன்பு மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோதும் இதையே சொன்னார்கள்இதுதான் நகர்ப்புற பயங்கரவாதம் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலி இருக்காது என்பது தொடர்பாக பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.
பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். வெறுப்பு பேச்சு இது என்று எதிர்க்கட்சி சார்பில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நடிகரும் பாஜக எதிர்பாளருமான பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
SHAME … History will document this Cheapest Oratory ..No point in putting any sense into an Emperor …who he is Naked and Desperate for Power. First phase of voting has rattled him… just wait . People will teach him #justasking #SaveDemocracySaveIndia #NoVoteForBJP… https://t.co/mpgm7kdWXF
— Prakash Raj (@prakashraaj) April 22, 2024
அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெட்கம் ... வரலாறு இந்த மலிவான சொற்பொழிவை ஆவணப்படுத்தும். முதல் கட்ட வாக்குப்பதிவு அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது... காத்திருங்கள். மக்கள் அவருக்கு கற்பிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.