"ஆப் கி பார் 400 பார்" - இலக்கை எட்டுமா மோடி தலைமையிலான பாஜக?
இம்முறை பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என அக்கட்சியினர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளனர்.
மக்களவை தேர்தல்
ஆனால், அது சாத்தியமா..? என்றால் கேள்விக்குறியான விஷயம் தான். நாட்டில் மொத்தமுள்ள மக்களவை தொகுதி 543. இது வரை மக்களவை தேர்தலில் பெற்ற பெரிய வெற்றி என்றால் அது 1984 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி தான்.
அத்தேர்தலில் அக்கட்சி 414 இடங்களை 46.86% வாக்கு சதவீதத்துடன் வென்று இருந்தது காங்கிரஸ். அப்போது நாட்டின் மக்களவை தொகுதிகள் 516 ஆகும். அதற்கு பிறகு எக்கட்சியின் இம்மாதிரியான வெற்றியை பெற்றதில்லை. அதனை தான் தற்போது மோடி தலைமையிலான பாஜக குறிவைத்துள்ளது.
1980'இல் துவங்கப்பட்ட பாஜக தன்னுடைய முதல் மக்களவை தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. அதனை தொடர்ந்து அக்கட்சி மேற்கொண்ட பணிகள் தற்போது நாட்டின் பெரும் கட்சியாக அக்கட்சியை மாற்றியுள்ளது. சரி, 400 தொகுதிகளை வெல்வது என்பது எதிர்க்கட்சிகளின் பலமே இல்லாத ஒரு நிலையை உருவாகும்.
ஆனால், தற்போதைய சூழல் அவ்வாறு உள்ளதா? இந்தியா கூட்டணி நாட்டின் பல பலமான எதிர்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மீ கட்சி என பல முக்கிய எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டணியை பாஜக அவ்வளவு எளிதில் வீழ்த்தும் என்பதே விவாதத்திற்கானது தான்.
10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள பாஜக மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் பல மாநிலத்தில் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று மாநில நிதி பகிர்வு. தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், டெல்லி என யூனியன் பிரதேசங்கள் கூட இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. அக்கட்சியின் மீது மதவாத சாயம் இருக்கும் சூழலில், பல மக்கள் எதிர்கொண்டே தான் இருக்கின்றன.
அதன் வெளிப்பாடு தான் தெலுங்கானா மாநில ஹைதராபாத் மக்களவை வேட்பாளர் மாதவி லதா, ராம நவமி அன்று பிரச்சாரத்தின் போது, மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்ததும், அதன் பின் பிரச்சாரம் சென்ற போது அவரை மக்கள் நிராகரித்ததும். இந்துத்துவ கொள்கையை உயர தூக்கி பிடிக்கும் பாஜகவை மதச்சார்பின்மையை வேண்டும் மக்கள் கடுமையாக எதிர்க்க தான் செய்கிறார்கள்.
அதே நேரத்தில் நாட்டின் பெரிய மாநிலமான 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் பாஜக பலமான கட்சியாகவே நீடிக்கிறது என்றே கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் மத அரசியல் தற்போதும் அக்கட்சிக்கு பெரும் ஊக்கத்தை தொடர்ந்து அளித்து வருகின்றது.
அயோத்தி ராமர் கோவில் முதல் அதிகபடியான நிதி ஒதுக்கீட்டில் துவங்கி பல திட்டங்களை அம்மாநிலத்தை நோக்கி அளித்துள்ளது. இது வரை வெளியான கருத்துக்கணிப்புகளும் அக்கட்சிக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தை குறிப்பிடுகின்றன. அதே போல, அக்கட்சி ஆட்சியில் இருக்கும் 14 மாநிலங்களும் அக்கட்சி சாதகமாக இருக்கும் என்றாலும், பல இடங்களில் கடும் அதிருப்திகள் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் கடந்த பாஜக சொல்லும், "ஆப் கி பார் 400 பார்" சாத்தியமா என்பது தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4'இல் தான் தெரியும். இது மனநிலையை மக்களிடம் வைப்பதாகும். உளவியல் ரீதியாக இம்முறை யாருக்கு வாக்களிக்கலாம் என யோசிப்பவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் ஒரு உளவியல் யுக்தி.