எனக்கு எதிராக வெளிநாட்டில் தீட்டப்படும் திட்டம் - பிரச்சாரத்தில் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!!
கர்நாடக மாநிலத்தில் 2 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தல்
நாட்டில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. கர்நாடகாவில் இருக்கும் 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டில் இரண்டாம் கட்டமாக வரும் 26-ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் 14 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக வரும் மே 7-ஆம் தேதி 14 தொகுதிக்கும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று(ஏப்ரல் 20) பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
எனக்கு எதிராக
கர்நாடக மாநில சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் "விஜய சங்கல்பா" நடைபெற்ற என்ற பெயரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பங்கேற்று கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது வருமாறு,
இங்கு தாய், சகோதரிகள் அதிக அளவில் வந்துள்ளனர். உங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்கு நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், நான் எனது வீட்டில் பார்த்துள்ளேன்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரிய மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் ஆட்சியில் மோடியை இருந்து அகற்றுவதற்காக ஒன்றுபட்டுள்ளனர்.
ஆனால், பெண்கள் சக்தியின் ஆசிர்வாதத்தின் காரணமாக என்னால் அந்த சவால்களை எதிர்கொண்டு முன்னேற முடிகிறது.