Sunday, May 11, 2025

3-வது உலக போரை நிறுத்தும் வல்லமை படைத்தவர் மோடி - அண்ணாமலை

Tamil nadu BJP Narendra Modi K. Annamalai
By Karthick a year ago
Report

தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, ஆளும் மாநில அரசை கடுமையாக சாடி வருகின்றார்.

அண்ணாமலை

தமிழகத்தில் தனி ஆதிக்கத்தை செலுத்த முயன்று வரும் பாஜக, திராவிட கட்சிகள் அல்லாத கூட்டணியை அமைத்து களமிறங்கியுள்ளது. அதிக நட்சத்திர வேட்பாளராக களமிறங்கிய கட்சியாக தமிழகத்தில் பாஜக இருக்கின்றது.

modi-has-the-talent-to-stop-3rdworld-war-annamalai

கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

3-வது உலக போர்

தொகுதிக்குட்பட்ட சூலூர் பகுதியில் அவர் பிரச்சாரம் செய்த போது, பேசியது வருமாறு, இன்றைய சூழலில் மீண்டும் ஒரு உலகப் போர் உலகளவில் வரக்கூடிய நிலை இருக்கின்றது.

ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை உண்டு - அண்ணாமலையை அப்படி சொல்லாதீங்க - சினேகன் அதிரடி

ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை உண்டு - அண்ணாமலையை அப்படி சொல்லாதீங்க - சினேகன் அதிரடி

ரஷ்யா உக்ரைன் போரை அடுத்து தற்போது இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல, வருங்காலங்களில் சவுதி அரேபியா நாட்டிலும் போர் பதற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

modi-has-the-talent-to-stop-3rdworld-war-annamalai

இச்சூழலில் 3-ஆம் உலகப்போர் உருவாகும் சூழல் நிலவுகிறது. இந்த போரை தடுக்கும் திறன்கொண்ட உலக தலைவராக மோடி திகழ்கிறார். இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கான தலைவராக திகழும் மோடி போர்களை நிறுத்தி உலக அமைதியை கொண்டு வரும் திறன் படைத்தவர். அவரின் பேச்சு - கருத்துக்கள் உலகளவில் மதிக்கப்படுகிறது.