ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை உண்டு - அண்ணாமலையை அப்படி சொல்லாதீங்க - சினேகன் அதிரடி
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சியின் சார்பில் சினேகன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
மக்கள் நீதி மய்யம்
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றாலும் கூட்டணியில் இணைந்துள்ளது.
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கட்சியின் முக்கிய பேச்சாளர் சினேகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சினேகன் பரப்புரை மேற்கொண்ட போது பேசியது வருமாறு, அவர் பேச துவங்கிய போதே, கூட்டத்தில் இருந்தவர்கள் "ஆட்டுக்குட்டி" என கோஷம் எழுப்பினார்கள்.
ஆட்டுக்குட்டி
இதற்கு உடனே பதிலளித்த சினேகன், தயவு செய்து இனி ஆட்டுக்குட்டி அண்ணாமலை என பாஜக தலைவர் அண்ணாமலையை அழைக்க வேண்டாம். ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை இருக்கு அதை கெடுக்க வேண்டாம்.
ஆட்டுக்குட்டி கொண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணாது. அடுத்தவர்களின் வீட்டை தாவி பார்க்காது. அடுத்தவர்களை போட்டுக் கொடுக்காது. அதனால், இன்று முதல் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என சொல்வதை விட்டுவிடுகிறோம். ஆட்டுக்குட்டி மீது பெரிய மதிப்பு உண்டு.