மோடி கேரண்டி - பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீடு - இவ்வளவு சிறப்பு திட்டங்களா?
BJP
Narendra Modi
Lok Sabha Election 2024
By Karthick
நாட்டில் 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, மீண்டும் ஆட்சியை பிடித்திட தீவிரம் காட்டி வருகின்றது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு துவங்க இன்னும் ஒரு வாரக்காலமே உள்ளன. நாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக தேர்தல் வாக்குறுதி
மீண்டும் வேண்டும் மோடி என முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் பிரச்சார பணிகளை முடக்கிவிட்டுள்ளது. தற்போது, வரும் 2024-ஆம் ஆண்டிற்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வெளியிட்டுள்ளது.
மோடி கேரண்டி என்ற பெயரில் அந்த பட்டியலின் முக்கிய சில அம்சங்கள்
- இலவச ரேஷன் பொருள்கள் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடரும்.
- உலகின் 3ஆவது பெரிய பொருளாதாராமாக இந்தியா உயர்த்தப்படும்.
- நாட்டில் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படும்.
- ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 70 வயதை தாண்டிய அனைவரும் இந்த பயனாளிகளாக இணைக்கப்படுவார்கள்.
- 3 கோடி வீடுகள் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
- வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
- நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண். தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை. தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
- கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம்.
- 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை.
- 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.