தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு வாழ்த்துகள் - ஒபிஎஸ், சீமான்!

O Paneer Selvam Seeman
By Swetha Mar 01, 2024 03:50 AM GMT
Report

12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஓபிஎஸ், சீமான்  வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

பொதுத்தேர்வு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பள்ளி மாணாகர்கள் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

12th public exam

தமிழ்நாடு முழுவதும் 3302 மையங்களில் 7.72 லட்சம் மாணாக்கர்களும்,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 40 மையங்களில் 14 ஆயிரத்து 688 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  பொதுத் தேர்வு அட்டவணை வெளியானது

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியானது

ஓபிஎஸ்

o paneer selvam

இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், இன்று (01-03-2024) முதல் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறவும், தாங்கள் விரும்பும் உயர் கல்வியை பயிலவும் எனது நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவச்செல்வங்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள்! இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் எனதன்பு மாணவ - மாணவியர் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்.

seeman

எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலுமே பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும். எனவே எனது உயிருக்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள்! தேர்வில் வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.