பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!

COVID-19 Government of Tamil Nadu
By Thahir Jul 01, 2022 06:16 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்த குமார் விதித்துள்ளார்.  

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! | Compulsory Masking In Schools

பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை

இது தொடர்பாக அவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பிவைத்துள்ளார். அந்த சுற்றறிக்கையில்,

பள்ளி வளாகத்தினுள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும்,

மாணவர்கள் அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

வெப்பநிலை சோதனை கட்டாயம் 

அதிகமான மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள். பணியாளர்கள் என அனைவரும் உடல் வெப்பநிலை சோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும்,

உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், வகுப்பறைக்குள் நல்ல காற்றோட்டமான சூழல் நிலவ வேண்டும் என்றும் அந்த ஆரிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.