அடுத்த 5 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரு மடங்காக உயரும் - ரகசியத்தை உடைத்த நிர்மலா சீதாராமன்!
இந்தியர்களின் தனிநபர் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
புதுடெல்லியில் நடந்த கவுடிலியா பொருளாதார மாநாடு 4 ஆம் தேதி தொடங்கி 6 தேதி வரை நடைப்பெற உள்ளது. அந்த வகையில் இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசியவர் இந்தியாவின் பொருளாதார செயல்திறன் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் 10 வது இடத்திலிருந்த இந்தியா, கடந்த 5 ஆண்டுகளில் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி முன்னேறி வந்ததாகத் தெரிவித்தார்.
வரும் பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார எழுச்சி தனித்துவமானதாக இருக்கும் என்றார் தொடர்ந்து பேசியவர் ,’’ஐரோப்பிய நாடுகள் மத்தியில் தொடர்ந்து போர் நிலவி வருகிறது . இதனால் அண்டை நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
தனிநபர் வருமானம்
ஆனால் சூழல் மோசமானதாக இருந்தாலும், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, தனது தனி நபர் வருமானத்தை ஒரு சில ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முயற்சி செய்து வருகிறது. பத்தாண்டுகளில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடையும் அதே வேளையில், உலகளாவிய பின்னணி இனி ஒரே மாதிரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளைக் கடக்கும்போது, வளர்ந்த நாடுகளைப் போன்றே புதிய பண்புகளை இந்தியா கொண்டிருக்கும்.
அதுமட்டுமில்லாது வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் நோக்கம், கருத்துகள், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் துடிப்பான பரிமாற்றம் காரணமாக அமையும் .இவை இந்தியர்களுக்கு மட்டுமல்லாது, உலகின் பிற பகுதிகளுக்கும் இந்தியா செழிப்பை ஏற்படுத்தும்.” எனத் தெரிவித்தார்.