மேயர் புடவையை இழுக்கும் கட்சியினர்; ஒரு நாளாவது கண்டித்ததுண்டா? நிர்மலா சீதாராமன் கேள்வி!
புடவையை இழுத்த கட்சியினரை ஒரு நாளாவது, அப்படி செய்யக்கூடாது என கண்டித்ததுண்டா என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் இந்த ஆண்டின் மக்களாவை தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் , தமிழகத்தில் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக அப்பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, அவிநாசியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுவினருடன் உரையாடினார்.
பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு திட்டம் தீட்டி குழுக்கே பணம் கொடுத்து உதவியுள்ளோம். ஓட்டுப் போட்டா டாய்லெட், போடலையா போ காட்டுக்கு என மோடி ஐயா நினைக்கவில்லை. ஓட்டுப் போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் கழிவறைகளை கட்டிக் கொடுத்தார்.
புடவையை இழுக்கும் கட்சியினர்
குடும்ப அரசியல் செய்வேன் மக்கள் ஆதரவு கொடுக்கும் வரை அது தப்பில்லை எனறு மறைமுகமாக முதல்வர் பேசி வருகிறார். ஆனால், பிரதமர் மோடியோ நாடு முழுவதும் உள்ள மக்கள் எனது குடும்பம் எனக்கூறி அரசியல் செய்து வருகிறார். திமுக அரசு பெண்களை மோசமாக நடத்துகிறது.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் எனச் சொல்லி பின்னர், தகுதி உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என நாடகம் போடுகின்றனர். திமுகவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். பெண்களை அவமதிக்கும் செயலை மோடி செய்யமாட்டார்.
திமுகவினரால் சென்னை மேயர் எவ்வளவு சிரமப்படுகிறார் எனப் பார்க்க முடிகிறது. அவரின் புடவையை இழுப்பது என அவரது கட்சிக்காரர்களே தகாத செயலில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளாவது, அப்படியெல்லாம் செய்யக்கூடாது என கண்டித்ததுண்டா.
தங்களுடைய சுயநலத்திற்காக மதுவை விற்போம், போதைபொருள் விற்போம், சினிமா தயாரிப்போம் என குடும்ப நலனை நினைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். டிரக்ஸ் முன்னேற்ற கழகத்தை விரட்டுவோம். அதற்கு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.