சரமாரியாக குறைந்த சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்து விற்பனையாகிறது.
சிலிண்டர் விலை
வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.
குறைவு
இந்நிலையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 70 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்ப்பட்டுள்ளது.
அதன்படி, சிலிண்டர் விலை 1,840 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.