சிலிண்டர் விலை ரூ.500 தான் - இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பாருங்க!
சிலிண்டருக்காக வழங்கப்படும் மானியம் பெறுகிறீர்களா?
கேஸ் சிலிண்டர்
மத்திய மாநில அரசுகள் கேஸ் சிலிண்டருக்கு பல மானியங்களை வழங்கி வருகின்றன. LPG மானியத்திற்குத் தகுதிபெற, உங்கள் ஆதார் அட்டை எண்ணை உங்கள் LPG சேவை வழங்குனருடன் இணைக்க வேண்டும்.
மேலும், உங்கள் வங்கிக் கணக்கை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். சமீபத்தில், வெள்ளை ரேஷன் கார்டு கொண்ட எல்பிஜி எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூ.500க்கு வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சர்கார் அறிவித்துள்ளார்.
மானியம்
அதன்படி, அந்த திட்டத்தில் நேரடியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்காமல், டெலிவரி செய்யும் போது முழுத் தொகையையும் எடுத்துக் கொண்டு தகுதியானவர்களுக்கு மீதப்பணம் மானியமாக வழங்கப்படுகிறது.
மானியத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை அறியவும், இல்லையெனில் புகார் தெரிவிக்கவும் 1800 2333 55 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம்.