Gas Cylinders Price: சிலிண்டர் விலை குறைப்பு - புதிய விலைப்பட்டியல் இதோ..
சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
சிலிண்டர் விலை
வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 1,911க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைவு
இதேபோல், டெல்லியில் 1745.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1859 ரூபாயாகவும், மும்பையில் 1698.50 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால், ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.