மாணவன் போல சீருடையில் வந்து குடியரசு தலைவரிடம் விருது பெற்ற தமிழக ஆசிரியர்
டெல்லியில் மாணவன் போல சீருடையில் சென்று குடியரசு தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழக ஆசியரியர் ராமச்சந்திரன்.
மாணவன் போல சென்ற ஆசிரியர்
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தாண்டு நாடு முழுவதும் 46 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கே.ராமச்சந்திரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
அப்போது மாணவன் போல பள்ளி சீருடையில் நிகழ்ச்சிக்கு வந்த ஆசிரியர் கே.ராமச்சந்திரன் குடியரசு தலைவரிடம் விருது பெற்றார்.
அவருக்கு விருது 50 ஆயிரம் ரொக்கம், மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழக்கப்பட்டது.