யார் இந்த திரௌபதி முர்மு? ஆசிரியர் முதல் குடியரசு தலைவர் வரை..!

Draupadi Murmu
By Thahir Jul 22, 2022 02:08 AM GMT
Report

நாட்டின் இரண்டாவது பெண் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு கடந்து வந்த பாதையை சற்று விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பிறப்பு 

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம் உபர்பேடா என்ற கிராமத்தில் ஜுன் 20-ம் தேதி 1958 ஆண்டு பிரஞ்சி நாராயண் துடு என்பவருக்கு மகளாக பிறந்தவர் திரௌபதி முர்மு.

Draupadi Murmu

திருமணம் 

வங்கி அதிகாரியான ஷியாம் சரண் முர்முவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ஷியான் சரண் உயிரிழந்தார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 4 ஆண்டுகளில் கணவரையும்,இரண்டு மகன்களையும் இழந்தார் திரௌபதி முர்மு.

Draupadi Murmu Family

தொடக்கத்தில் ஆசிரியர்

தொடக்கத்தில் திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும், ஒடிசா அரசின் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.

Draupadi Murmu

தேர்தலில் வெற்றி

திரௌபதி முர்மு 1997 ஆம் ஆண்டு பாரதி ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் முதல் முறையாக ராய்ரங்பூர் நகர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அவர் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Draupadi Murmu

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்தின் தலைவராக முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜவின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 

அமைச்சரவையில் இடம் பிடித்த முர்மு

ஒடிசாவில் பிஜேபி மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் போது, அவர் மார்ச் 6, 2000 முதல் ஆகஸ்ட் 6, 2002 வரையிலும், ஆகஸ்ட் 6, 2002 முதல் மீன்வளம் மற்றும் விலங்கு வள மேம்பாட்டுத் துறையிலும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

Draupadi Murmu

2000 மற்றும் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராய்ரங்பூர் சட்டமன்ற தொகுதியின்     எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தால் சிறந்த எம்எல்ஏவுக்கான நீலகந்தா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ஆளுநராக நியமனம்

திரௌபதி முர்மு 2015 ஆம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Draupadi Murmu

ஒடிசாவில் இருந்து இந்தியா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் பழங்குடித் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

குடியரசுத் தலைவர்

63 வயதாகும் திரௌபதி முர்மு பாஜக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

திரௌபதி முர்முவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை விட 2824  வாக்குகள் பெற்று குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ளார்.

Narendra Modi

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் வரும் 25-ம் தேதி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.