கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் பணி நீக்கம் - அதிரடி அறிவிப்பு
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர்கள் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மலேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி ஒன்றே தற்காலிக தீர்வாக உள்ளதால் அதனை அனைத்து மக்களுக்கும் செலுத்த உலக நாடுகள் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் மலேசியாவில் இதுவரை 22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதனிடையே மலேசியாவில் அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் ஆசிரியர்கள் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்கள் பணி நீக்கமும் செய்யப்படலாம் என்றும் மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.