இனி கல்லூரிகளில் காதல் பாடம்; அரசு புது ஐடியா - என்ன இப்படி இறங்கிட்டாங்க?
கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் காதல் பாடம் கற்றுக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
உலகில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்தது. தற்போது அந்நாட்டு மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது.
தொடர்ந்து அரசின் குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகள், வாழ்க்கைச் செலவுகள், குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமின்மை போன்ற காரணங்களால் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
காதல் பாடம்
மேலும், கல்வி மற்றும் காதல் சமநிலையில் நேரத்தை ஒதுக்க முடியாத காரணத்தினால் 57 சதவீதம் பேர் காதல் செய்ய விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர்.
எனவே, ருமணம், காதல், குழந்தைப் பிறப்பு, குடும்பம் பற்றி நேர்மறையான செய்திகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க காதல் பாடத்தை அறிமுகம் செய்யும்படி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளை அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.