மெட்ரோவில் துண்டு அணிந்தபடி 4 பெண்கள் பயணம் - வைரலாகும் வீடியோ!
துண்டு அணிந்தபடி 4 பெண்கள் மெட்ரோவில் பயணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
மெட்ரோவில் அட்ராசிட்டி
ரஷ்யாவைச் சேர்ந்தவர் கேத் சும்ஸ்கயா. பிரபல மாடல் அழகியான இவரை சமூக வலைதளமான இன்ஸ்டாவில் 30 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
தொடர்ந்து வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், தோழிகள் 3 பேருடன் இணைந்து குளியல் அறையில் பயன்படுத்தும் துண்டு மட்டும் அணிந்தவாறு மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.
வைரல் வீடியோ
இதுகுறித்த வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், துண்டுடன் ஹை ஹீல்ஸ் அணிந்தவாறு 4 பெண்கள் மெட்ரோ ரயிலில் ஏறுகின்றனர்.
ஆண் பயணிகள் அருகே நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொள்ளும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ வைரலாகி ஒரு வாரத்திற்குள் 20 லட்சம் பார்வைகளையும் 2½ லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.