வெர்ஜினிட்டியை மீட்டெடுக்க அறுவை சிகிச்சை - இன்ஸ்டா பிரபலம் எடுத்த அதிரடி முடிவு
கன்னித்தன்மையை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய உள்ளதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் தெரிவித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சை
பிரேசிலை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான ரவேனா ஹன்னிலியை(Ravena Hanniely)(23) 2,66,000க்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், 19,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம்) செலவு செய்து ஹைமனோபிளாஸ்டி(hymenoplasty) அறுவைச்சிகிச்சை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சுயமரியாதையை மீட்டெடுப்பது
இது குறித்து பேசியுள்ள அவர், "நான் மீண்டும் கன்னியாக மாற விரும்புகிறேன். இது ஒரு பெண் தனக்காக எதை விரும்புகிறாள் என்பதைப் பற்றியது. இது என் சுயமரியாதையை மீட்டெடுப்பது பற்றியது. இது எனது தனிப்பட்ட விருப்பம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இதை அனைவரும் புரிந்துகொள்வதில்லை அல்லது ஆதரிக்கவில்லை. தனிப்பட்ட முடிவுகளை மதிக்கத் தொடங்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இவரின் நிலைப்பாடு குறித்து, லண்டனை தளமாகக் கொண்ட மெடிசனல் கிளினிக்கின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹனா சலுசோலியா பேசியதாவது, "இது ஒரு ஒப்பனை செயல்முறையாக கருதப்பட்டாலும், கன்னித்தன்மையை மீட்டெடுக்காது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர், தொற்று, தழும்புகள் மற்றும் ஒழுங்கற்ற குணமடைதல் போன்ற அபாயங்கள் மற்றும் முடிவுகளில் அதிருப்தி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது" என எச்சரித்துள்ளார்.
இருந்தாலும் ஹன்னிலி இந்த முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் அறுவைச்சிகிச்சைக்கான தேதியை அவர் இறுதி செய்யவில்லை. மேலும், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வழிகாட்டுதல்கள், சிகிச்சை முறைகளை பின்பற்ற விரும்புகிறார்.
ஹைமனோபிளாஸ்டி
ஹைமனோபிளாஸ்டி என்பது, கருவளையத்தை(கன்னித்திரை) மீட்டமைப்பதற்கான ஒரு அறுவை சிகிச்சை, ஆகும். கருவளையம் என்பது பெண்ணின் பிறப்புறுப்புக்குள் இருக்கும் மெல்லிய சவ்வு ஆகும்.
பெண்ணின் முதல் உடலுறவின்போதோ, தீவிரமான உடற்பயிற்சிகள், ஜிம்னாஸ்டிக்ஸ், குதிரையேற்றம், நீச்சல், சைக்களிங் போன்றவற்றின் போதே அந்த மெல்லிய சவ்வு கிழிந்து ரத்தம் வரலாம். இந்த அறுவை சிகிச்சையின் போது கருவளையத்தின் கிழிந்த சவ்வை, தையல்களால் தைத்து அதன் முந்தையை தோற்றத்தை மீட்டெடுக்கிறது.