விவாகரத்து முடிவெடுத்த கணவர்; மாடல் அழகி செய்த அதிர்ச்சி செயல் - பகீர் பின்னணி!
மாடல் அழகி ஒருவர், தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து முடிவு
அமெரிக்காவைச் சேர்ந்தவர் முன்னாள் நியூயார்க் மாடல் அழகி சப்ரினா(27). பஜ்திம் கிராஸ்னிகி(34) என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.
இருவரும் புளோரிடாவில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர். தொடர்ந்து சப்ரினா சில ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவியின் செயல்
எனவே, சப்ரினாவை விவாகரத்து செய்யும் முடிவுக்கு கணவர் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சப்ரினா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே கிராஸ்னிக் உயிரிழந்துள்ளார்.
உடனே சப்ரினாவும், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றினர்.
இரட்டை மரணம் தொடர்பாக வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.