வீடியோ சூட்டிங்கில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 மாடல் அழகிகள்!

Sexual harassment Crime South Africa
By Sumathi Jul 30, 2022 11:30 AM GMT
Report

 தென்ஆப்பிரிக்காவில் மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங்கின்போது 8 மாடல் அழகிகளை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வீடியோ சூட்டிங்

தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் அருகே குருகெர்ஸ்ட்ராப் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் ஏராளமான சூட்டிங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கு மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங் நடைபெற்றது வருகிறது.

வீடியோ சூட்டிங்கில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 மாடல் அழகிகள்! | Rape 8 Models Men Stripped Naked Robbed Africa

இந்த சூட்டிங்கில் 8 மாடல் அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் ஆவார்கள். மேலும் சூட்டிங் தொடர்பான பணியில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அச்சுறுத்திய கும்பல்

இந்நிலையில் மியூசிக் ஆல்பத்துக்கான சூட்டிங் வழக்கம்போல் நடைபெற்று வந்தது. அப்போது துப்பாக்கி ஏந்தி ஒரு கும்பல் திபுதிபுவென நுழைந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களிடம் துப்பாக்கிகளை காண்பித்து அச்சுறுத்திய கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

வீடியோ சூட்டிங்கில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 மாடல் அழகிகள்! | Rape 8 Models Men Stripped Naked Robbed Africa

மேலும் துப்பாக்கி காட்டி மிரட்டி மாடல் அழகிகளிடம் அத்துமீறினர். துப்பாக்கியை காட்டி மிரட்டில் கும்பல் மாடல் அழகிகளை பலவந்தமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அங்கிருந்த ஆண்களை நிர்வாணப்படுத்தித் தாக்கிய கும்பல், அனைவரின் பணத்தையும் பொருள்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை 

இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா, குற்றவாளிகளை விரைந்து பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டின் காவல்துறை உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக இதுவரை சுமார் 20 சந்தேக நபர்களில் மூவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை அமைச்சர் பெக்கி செலே தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது பெண்கள் 18 மற்றும் 35 வயதிற்குட்பட்டவர்கள்,

கடும் பரபரப்பு

ஒரு பெண் 10 ஆண்களாலும் மற்றொரு பெண் 8 பேராலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக செலே கூறினார். முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும்,

இவர்கள் தென்னாப்பிரிக்காவின் கனிம சுரங்கங்களில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பாலியல் குற்றங்கள் அதிகம் காணப்படுவதாகவும், சராசரியாக 12 நிமிடத்திற்கு ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது