இந்த 100 நகரங்கள்தான் மக்களை அதிகம் கவர்ந்தவை - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
மக்களை அதிகம் கவர்ந்த டாப் 100 நகரங்களின் பட்டியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
100 நகரங்கள்
ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் நிறுவனம் தர ஆய்விகளை நடத்திவந்துள்ளது. அதாவது, பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களி அடிப்படையில் ஒரு சர்வே நடந்துள்ளது.
அதனடிப்படையில், தொடர்ந்து 4வது ஆண்டாக பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் மேட்ரிட், டோக்கியோ 3வது இடத்திலும், ரோம் 4வது இடத்திலும், மிலன் 5வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா?
நியூயார்க், ஆம்ஸ்டர்டேம், சிட்னி, சிங்கப்பூர், பார்சிலோனா ஆகிய நகரங்கள் டாப் 10ல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் சுற்றுலாவிற்கு வழங்கப்படும் ஏராளமான சலுகைகள் காரணமாக,
பாரிஸிற்கு இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 79.3 கோடி பேர் வருகை தந்துள்ளனர். மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை முதல் 100 இடங்களில் தலைநகரான டில்லி 74வது இடத்தில் உள்ளது. வேறு எந்த இந்திய நகரங்களும் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.