காலேஜ் பங்க்.. காதலனுடன் ஊரை சுற்றிவிட்டு கல்லூரி மாணவி செய்த காரியம் - ஷாக்கான போலீசார்!
கல்லூரி மாணவி ஒருவர் காதலனுடன் ஊரை சுற்றிவிட்டு செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல்
சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாணவி கல்லூரி செல்வதாக தன் அம்மாவிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் வழக்கத்தை விட மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்திருக்கிறார். அதனால் வீட்டில் பெற்றோர் பதறியுள்ளனர்.
அப்பொழுது இவர்கள் மாணவியிடம் விசாரிக்கையில், "நான் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றேன், வழியில் ஆட்டோவை மறித்து 2 மர்ம நபர்கள் ஏறினார்கள்.. அந்த நபர்கள் மயக்க மருந்தை தனது முகத்தில் தெளித்து ஆட்டோவில் என்னை கடத்தினார்கள். பின்னர் சென்னை புறநகர் பகுதியில் தன்னை இறக்கி விட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
காதலனுடன் ஜாலி
இந்நிலையில், அவரது பெற்றோர் கடத்தியவர்கள் என்ன செய்தனர் என்று கேட்டபொழுது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. உடனே பெற்றோர் தனது மகளை அழைத்துக் கொண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நடந்தவற்றை கூறியுள்ளார், அப்பொழுது கோடம்பாக்கம் பகுதியில் இருந்து மாணவி கடத்தப்பட்டதாக கூறியதால் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர்.
அதனால் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சென்று நடந்ததை கூறினர், தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினார்.
அப்பொழுது மாணவி கூறிய தகவல் தவறானது என்பதும், கல்லூரிக்கு போகாமல் காதலனுடன் சுற்றியதை மறைப்பதற்காக மாணவி பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதைடுத்து பெற்றோரிடம் மகள் செய்த காரியத்தை கூறிய போலீசார், மாணவியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.