திருமணமாகி 7 மாதம்.. ஆணாக மாறிய கர்ப்பிணி பெண், தோழியுடன் ஓட்டம் - தவிக்கும் கணவன்!
இளம்பெண் ஒருவர் திருநம்பியாக மாறி தினது தோழியுடன் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி காணவில்லை
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த 27 வயதான வாலிபர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த 19 வயது பெண்ணை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
அப்பொழுது அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவந்ததும், பின்னர் அவர் தனது தோழியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனிடையே இவர் 5 மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அப்பொழுது இவரது கணவர் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆழியார் போலீசிடம் புகாரளிதார்.
நள்ளிரவில் நண்பர்களுடன் கார் ரேஸ்.. விபத்தில் சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் - 3 பேர் படுகாயம்!
திருநம்பி
இந்நிலையில், வழக்கு பதவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். அப்பொழுது அவரது மனைவி தனது தோழியுடன் சென்னையில் கணவன் மனைவி போல வாழ்வது தெரியவந்தது. அப்பொழுது தான் அந்த இளம்பெண் திருநம்பியாக மாறியது தெரியவந்தது, அவரை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
அந்த சமயத்தில் அவர் 3 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். வீட்டிற்கு வந்தும் திருநம்பியான இவர் தனது தோழியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அதன்பிறகு மனைவி மீண்டும் மாயமானார், இவரை கண்டுபிடித்து தருமாறு ஆழியார் போலீசிடம் புகாரளிதார்.
தற்பொழுது திருநம்பியான அவர் தனது தோழியுடன் இருப்பதாக தெரியவந்தது, அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.