ஆணாக மாறி தன் தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் - பரபரப்பு சம்பவம்

samugam-marrige- exciting-incident
By Nandhini Dec 14, 2021 03:43 AM GMT
Report

திருப்பூரில் ஆணாக மாறிய பெண் தன் தோழியை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த 21 வயது பெண், அப்பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணும் அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர். 2 பெண்களில் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் ஒரு வகை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் மருத்துவரை அணுகி இருக்கிறார். பிறகு, மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் மாற்றம் ஏற்பட்ட இளம்பெண் சிகிச்சை எடுத்து திருநம்பியாக மாறினார்.

திருநம்பியாக மாறியதையடுத்து நட்பாக பழகி வந்த தோழிகள் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் 8ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் திருநம்பியை திருமணம் செய்து கொண்ட தனது மகளை மீட்டு வர முயற்சி செய்துள்ளனர்.

பெற்றோர் தேடுவதை அறிந்த இருவரும் திருப்பூர் தெற்கு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இளம்பெண் மற்றும் திரு நம்பியை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் மனப்பூர்வமாக விரும்பி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து பெற்றோர்களிடம் கூறி அனுப்பி வைத்தனர்.

ஆணாக மாறி தன் தோழியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.